வெள்ளி, 17 ஜனவரி, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே!


                                  04.01.2014 அன்று  நடைபெற்ற  ஒப்பந்த ஊழியர் சங்க  செயலக கூட்டத்தின் முடிவின்படி TNTCWU மாவட்ட செயற்குழு கூட்டம்  19.01.2014. அன்று காலை 10.00 மணிக்கு கடலூர் சங்க அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளைச்செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

தலைமை        : தோழர் . S.V.பாண்டியன் மாவட்ட தலைவர்  

வரவேற்புரை : தோழர் .  J .முரளி  மாவட்ட உதவி செயலர் 

துவக்கவுரை :  தோழர் . K.T.சம்பந்தம் மாவட்ட செயலர் BSNLEU

வாழ்த்துரை  :  தோழர் . V. குமார் மாவட்ட தலைவர் BSNLEU
                                       தோழர் . A.அண்ணாமலை மாவட்டஉதவி செயலர்  BSNLEU
                             தோழர் . I.M.மதியழகன்  மாவட்ட அமைப்பு செயலர் BSNLEU
                                       தோழர் ..மாரிமுத்து மாநில செ.குழு உறுப்பினர் TNTCWU
                               தோழர் .I.S .சுந்தரக்கண்ணன்  மாநில உதவி  செயலர் TNTCWU


சிறப்புரை :        தோழர் .K.விஸ்வநாதன் 
                            மாநில பொருளாளர்TNTCWU


ஆய்படு பொருள் :
                            1. மாநில செயற்குழு  முடிவுகள்  அமுலாக்கம் 
                     2. EPF /ESI பிரச்சனைகள் 
                      3. நிதிநிலை 
                      4. மற்றவை தலைவர் அனுமதியுடன் 
                                  


நன்றியுரை : J.கந்தன் மாவட்ட பொருளர் TNTCWU





                                                                                                                                                தோழமையுடன் 
                                                                     
                                                                                                                                          M.பாரதிதாசன் 
                                                                         மாவட்ட செயலர்

                    







திங்கள், 13 ஜனவரி, 2014

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!



இரங்கல் செய்தி!!

BSNLEU மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் I.M மதியழகன் அவர்களுடைய வளர்ப்பு தாய் திருமதி அன்னமுத்து அம்மாள் அவர்கள்  இன்று (13.1.2014) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை  (14.1.2014) காலை திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

வெள்ளி, 10 ஜனவரி, 2014

சபாஷ் தோழர் . M .மணிகண்டன்

அன்பார்ந்த தோழர்களே!

     தோழர் M.மணிகண்டன்    கடலூர்  மாவட்ட  BSNL அலுவலகத்தில்  VPT  பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகின்றார் . இவர் மணிப்பூர் மாநிலத்தில்  நடைபெற்ற அகல இந்திய  அளவிலான டேக் & டோ (THANG-TA)  கராத்தே போட்டியில், தமிழ்நாடு டேக் & டோ (THANG-TA)  அமெச்சூர் அஸோஸியேஷாயேஷன்  சார்பாக கலந்து கொண்டு அகில இந்திய அளவில்  மூன்றாம் பரிசு  பெற்றுள்ளார்.  மேலும் அவர்  சர்வதேச  அளவில்  நடைபெற உள்ள டேக் & டோ (THANG-TA) கராத்தே  போட்டிக்கு  இந்திய அணியின் சார்பில் பங்கேற்க  தேர்வு   பெற்றுள்ளார். தோழர்  M.மணிகண்டன் மேலும்  பல வெற்றிகள் பெற கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.




தந்தி செய்தி