வெள்ளி, 20 டிசம்பர், 2013

நெய்வேலி கிளை பொதுக்குழு கூட்டம்

நெய்வேலி கிளை பொதுக்குழு கூட்டம்

நெய்வேலி கிளையின் பொதுக்குழு கூட்டம் வரும் 26-12-2013 அன்று நெய்வேலி மெயின் தொலைபேசி நிலையத்தில் நடை பெற உள்ளது. அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்
V.மாரிமுத்து, 
கிளை செயலர். நெய்வேலி.

அகில இந்திய சங்க செய்திகள்(BSNLCCWF)

கர்நாடக மாநில தொலை தொடர்பு தலைமை பொது மேலாளர் சந்திப்பு :

19-12-2013 அன்று கர்நாடக CGM  shri R.K .மிஸ்ரா அவர்களை நமது சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் V.A .N. நம்பூதிரி மற்றும் தோழர் C.K .குண்டன்னா மாநில செயலர் BSNLEU, ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் மகந்தேஷ் அவர்களும் மாநில செயலர் பிரவீன் படேகர் ஆகியோர் சந்தித்து ஒப்பட்ந்த ஊழியர் கோரிக்கை சம்பந்தமாக விவாதித்தனர்.


கர்நாடக மாநில Dy.Chief Labour Commissioner (Central) அவர்களுடன் சந்திப்பு.

19-12-2013 அன்று கர்நாடக Dy. CLC Shri.Viswanath அவர்களை நமது சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் V.A .N. நம்பூதிரி மற்றும் தோழர் C.K .குண்டன்னா மாநில செயலர் BSNLEU, ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் மகந்தேஷ் அவர்களும் மாநில செயலர் பிரவீன் படேகர் ஆகியோர் சந்தித்து ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் சம்பந்தமாக விளக்கி கூறினர். Dy. CLC அவர்கள்  இது சம்பந்தமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


  • நமது அகில இந்திய சங்கத்தின் செயற்குழு ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜனவரி 2014 18-19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இப்படிக்கு 
தோழமையுடன் 
M .பாரதி , மாவட்ட செயலர்.

திங்கள், 16 டிசம்பர், 2013

மாநில செயற்குழு

 மாநில செயற்குழு சுற்றறிக்கை 

கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வணக்கம் !

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 11.12.2013 அன்று மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி பொது மேலாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்திற்கு BSNLEU  மாவட்ட சங்க தலைவர் தோழர் V .குமார்  அவர்களும் TNTCWU மாவட்ட தலைவர் தோழர் S.V .பாண்டியன்  அவர்களும் தலைமை தாங்கினர். BSNLEU  மாவட்ட உதவி செயலர் தோழர் A.அண்ணாமலை TNTCWU மாவட்ட செயலர் M.பாரதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். TNTCWU மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் V.மாரிமுத்து BSNLEU  மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.இறுதியாக BSNLEU மாவட்ட பொருளாளர் தோழர் G .S .குமார்  நன்றி கூறி  ஆர்பாட்டத்தை  முடித்து வைத்தார்.திங்கள், 2 டிசம்பர், 2013

கையெழுத்து இயக்கம்

BSNLEU & TNTCWU இணைந்த சுற்றறிக்கை படிக்க :- Link

கையெழுத்து இயக்க மனுவின் மாதிரி:- Linkதந்தி செய்தி